டெல்லியில் நிலவிய மோசமான வானிலையால் ஒன்பது விமானங்கள் திருப்பி விடப்பட்டன. தலைநகர் டெல்லியில் இடி, மின்னலுடன் கனமழை வெளுத்து வாங்கியது. தொடர்ந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. இதனால், சுமார் ஒரு மணி நேரத்தில் டெல்லியில் தரையிறங்க வேண்டிய 9 விமானங்கள் திருப்பி விடப்பட்டது. அதன்படி, 9 விமானங்களும், ஜெய்ப்பூர், லக்னோ, அகமதாபாத் ஆகிய பகுதிகளுக்கு திருப்பி விடப்பட்டன