2024 தேர்தலில் போட்டியா? - ஒரே போடாக போட்ட யுவராஜ் சிங்

Update: 2024-03-02 06:42 GMT

மக்களவைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் விளக்கம் அளித்துள்ளார். பாஜகவில் யுவராஜ் சிங் இணைய இருப்பதாகவும், பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் தொகுதியில் போட்டியிட இருப்பதாகவும் தகவல்கள் பரவின. இந்நிலையில், இதற்கு மறுப்பு தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள யுவராஜ் சிங், தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என்று குறிப்பிட்டுள்ளார். தனது தொண்டு நிறுவனம் மூலம் மக்களுக்கு தொடர்ந்து உதவி செய்வதே தனது விருப்பம் என்றும் யுவராஜ் சிங் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்