பெங்களூரை நடுங்கவிடும் அதிகாலை வாக்கிங் வீடியோ... கதறி ஓடும் பெண்... பதறவைக்கும் CCTV பதிவு

Update: 2024-08-06 04:08 GMT

பெங்களூரை நடுங்கவிடும் அதிகாலை வாக்கிங் வீடியோ... கதறி ஓடும் பெண்... பதறவைக்கும் CCTV பதிவு

பெங்களூரில் அதிகாலை நடைப்பயிற்சிக்குச் சென்ற பெண்ணிடம், இளைஞர் ஒருவர் தவறாக நடக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கோணனகுண்டே அருகில் உள்ள கிருஷ்ணா நகரில் கடந்த வெள்ளிக்கிழமை, வட இந்திய பெண் ஒருவர் அதிகாலை நடைப்பயிற்சிக்கு சென்றார். அவருடைய தோழியின் வருகைக்கு காத்திருந்தபோது, அங்கு வந்த இளைஞர் ஒருவர், அவரை விரட்டிச் சென்று தவறாக நடக்க முயன்றுள்ளார். அந்த பெண் கூச்சலிட்டதால் அந்த இளைஞர் தப்பி ஓடிவிட்டார். இதுதொடர்பான பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி, பரவி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்