செல்லோ டேப் கம்பெனியில் பயங்கர தீ விபத்து.. தொழிலாளர்களுக்கு நேர்ந்த விபரீதம்
கர்நாடகா மாநிலம் பெலகாவியில் செல்லோ டேப் தயாரிப்பு ஆலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 5 தொழிலாளர்கள் காயம் அடைந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், காயம் அடைந்த தொழிலாளர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராடி ஆலையில் பற்றி எரிந்த நெருப்பை கட்டுப்படுத்தினர். திடீர் தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.