மத்திய அமைச்சர் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் - "ஆக்கப்பூர்வமான விவாதங்களுக்கு மத்திய அரசு தயார்"

Update: 2023-12-02 13:45 GMT

ஆக்கப்பூர்வமான விவாதங்களுக்கு மத்திய அரசு தயாராக இருப்பதாக, மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர், வரும் 4-ம் தேதி தொடங்கி 22ம் தேதி வரை நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் பொது சிவில் சட்டம், பழைய சட்டங்களுக்கு பதிலாக புதிய மசோதாக்கள் உள்ளிட்ட பிரச்சனைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. இந்நிலையில், இந்தக் கூட்டத்தொடரை சுமுகமாக நடத்துவது குறித்து டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள நூலக கட்டிடத்தில், அனைத்துக் கட்சி கூட்டம், நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தலைமையில் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் 23 கட்சிகளை சேர்ந்த 30 தலைவர்கள் கலந்து கொண்டனர். தி.மு.க சார்பில் வில்சன், அதிமுக சார்பில் தம்பிதுரை பங்கேற்றனர். தம்பிதுரைக்கு அருகில் ரவீந்திரநாத் அமர்ந்திருந்தார். கூட்டத்திற்குப்பின் செய்தியாளர்களிடம் பேசிய பிரகலாத் ஜோஷி, அவையில் விதிமுறைகள் மற்றும் நடைமுறைகளைப் பின்பற்றி விவாதங்கள் நடத்தப்பட வேண்டும் என்றும், அனைத்து விவகாரங்கள் குறித்தும் விவாதம் நடத்த அரசு தயாராக உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்