சென்னையில் ஆகஸ்டு 3 முதல் 12ஆம் தேதி வரை, ஆசிய கோப்பை ஹாக்கி தொடர் நடைபெற உள்ளது. இதற்கான தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவுக்கு, தமிழக அரசின் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி, திமுக எம்.பி. கலாநிதி வீராசாமி, டெல்லியில் அகிலேஷ் யாதவை நேரில் சந்தித்து அழைப்பிதழை வழங்கினார்.