சீனா தலையில் விழுந்த பெரிய இடி.. லேப்டாப், கம்ப்யூட்டர்கள் இறக்குமதிக்கு வேட்டு - கட்டுப்பாடுகள்
லேப்டாப்கள் இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட தடையை, மத்திய அரசு தற்காலிகமாக ஒத்தி வைத்துள்ளது. இதன் பின்னணி பற்றி இந்தத் தொகுப்பு அலசுகிறது.
இந்தியாவின் லேப்டாப்கள், கம்ப்யூட்டர்கள் தேவையில் பெரும் பகுதி இறக்குமதி மூலம் பூர்த்தி செய்யப்படுகின்றன.
அதில், சீனாவின் பங்கு 70 முதல் 80 சதவீதமாக உள்ளது.
2022-23ல், சீனாவில் இருந்து 33,900 கோடி ரூபாய்
அளவுக்கு லேப்டாப்கள், கம்ப்யூட்டர்கள் இறக்குமதி செய்யப்பட்டன.
இந்நிலையில் கம்ப்யூட்டர்கள், டேப்டாப்கள்
ஆகியவற்றை இறக்குமதி செய்ய லைசென்ஸ் கட்டுப்பாடுகளை விதித்து கடந்த வியாழக்கிழமை அதிரடி உத்தரவை பிறப்பித்தது மத்திய அரசு.
சீன இறக்குமதிகளை கட்டுப்படுத்தி, இந்தியாவில் லேப்டாப்கள் மற்றும் கம்ப்யூட்டர் உற்பத்தியை அதிகரிக்கச் செய்ய மத்திய அரசு இதை முன்னெடுத்ததாக கூறப்பட்டது.
இதன் விளைவாக, சாம்சங், ஆப்பிள் உள்ளிட்ட முக்கிய
நிறுவனங்களின் கம்ப்யூட்டர் இறக்குமதிகளை, சுங்கத் துறை
அதிகாரிகள் நிறுத்தி வைத்தனர். இதனால் ஏற்பட்ட குழப்பங்களை தொடர்ந்து, இந்த நடவடிக்கையை அக்டோபர் 31 வரை ஒத்தி வைப்பதாக அந்நிய வர்த்த இயக்குனரகம் அறிவித்துள்ளது.
இறக்குமதி லைசென்ஸ் பெற இணையம் மூலம் விண்ணப்பம் அளித்தால் ஒரே நாளில் அளிக்கப்படும் என்று எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத் தின் செயலாளர் அல்கேஷ் குமார் ஷர்மா கூறியுள்ளார்.
இந்தியாவில் கம்ப்யூட்டர்கள், லேப்டாப்கள் உள்ளிட்ட
உயர் ரக எலக்ட்ரானிக் பொருட்கள் உற்பத்தியை ஊக்குவிக்க,
உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத் தொகை திட்டத்தை கடந்த
மே மாதத்தில் மத்திய அரசு அறிவித்தது.
அடுத்த ஆறு ஆண்டுகளுக்கு மொத்தம் 17,000 கோடி ரூபாய்
அளவுக்கு ஊக்கத் தொகை அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.