ஒரே அறையில் 4 டாய்லெட்... "8வது உலக அதிசயம் இது தான்..." - உபி -யில் அரங்கேறிய அவலம்

Update: 2023-09-16 10:48 GMT

உத்தரப்பிரதேச மாநிலம் அமேதி மாவட்டம், கட்டேஹெட்டி கிராமத்தில் கட்டப்பட்ட கழிவறைகள் குறித்த காட்சிகள் வெளியாகி சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரே அறையில் அடுத்தடுத்து நான்கு கழிப்பிடங்கள் சுவரின்றி கட்டப்பட்டுள்ளதை, 8வது உலக அதிசயமாக அறிவிக்க வேண்டுமென உத்தரப்பிரதேச காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது. கழிவறைக்கு சுவர் கட்டுவதற்கான பணத்தை சுருட்டியது ஒப்பந்ததாரர்களா? அமைச்சர்களா? அதிகாரிகளா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளது. இதனிடையே, சிறு குழந்தைகள் பயன்படுத்துவதற்காக கட்டப்பட்டுள்ள சமுதாயக் கழிவறை என அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்