600க்கும் மேற்பட்ட பயணிகள் ரயில் சேவை ரத்து - காரணம் என்ன?

கூடுதல் நிலக்கரியை ஏற்றி செல்வதற்காக அதிக ரயில் பாதைகளை ஏற்படுத்தும் விதமாக 600 க்கும் மேற்பட்ட பயணிகள் ரயில் சேவையை ரயில்வே துறை ரத்து செய்துள்ளது.

Update: 2022-04-29 11:25 GMT
கூடுதல் நிலக்கரியை ஏற்றி செல்வதற்காக அதிக ரயில் பாதைகளை ஏற்படுத்தும் விதமாக 600 க்கும் மேற்பட்ட பயணிகள் ரயில் சேவையை ரயில்வே துறை ரத்து செய்துள்ளது. பல்வேறு மாநிலங்களில் அதிகரித்துள்ள நிலக்கரி தேவையை கருத்தில் கொண்டு கூடுதல் நிலக்கரியை ஏற்றி சொல்ல ஏதுவாக மே 24 வரை 670 பயணிகள் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது. அதன்படி நாளொன்றுக்கு சராசரியாக 16 மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. நாளொன்றுக்கு நிலக்கரியை கொண்டு செல்லும் ரயில் ரேக்குகளின் எண்ணிக்கை 400 ஐ கடந்துள்ளது. ஒரு ரேக்கில் 3 ஆயிரத்து 500 டன் நிலக்கரி வீதம் நாளொன்றுக்கு சுமார் 415 நிலக்கரி ரேக்குகளை வழங்க ரயில்வே துறை உறுதி பூண்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள அனல் மின் நிலையங்களில் நிலக்கரி இருப்பின் அளவு மேம்படும் வரை இந்த நடவடிக்கை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ரயில் சேவை ரத்து செய்யப்பட்டதற்கு பல்வேறு மாநிலங்களில் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், அனல் மின்நிலையங்களில் நிலக்கரி பற்றாக்குறை இல்லாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டியதே தற்போதைய உடனடி தேவை என்று ரயில்வேத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்