"குட்டி" பேத்திக்கு ஹெலிகாப்டரில் வரவேற்பு... இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த விவசாயி

புனேவை சேர்ந்த விவசாயி ஒருவர் அண்மையில் பிறந்த பேத்தியை ஹெலிகாப்டர் மூலம் தனது வீட்டிற்கு அழைத்து வந்தார்.

Update: 2022-04-28 09:58 GMT
புனேவை சேர்ந்த விவசாயி ஒருவர் அண்மையில் பிறந்த பேத்தியை ஹெலிகாப்டர் மூலம் தனது வீட்டிற்கு அழைத்து வந்தார். மகாராஷ்டிராவின் பலேவாடியை சேர்ந்த அஜித் பாண்டுரங் பல்வத்கரின் மகனுக்கு அண்மையில் பெண் குழந்தை பிறந்தது. குழந்தையானது தாய்வழி பாட்டி வீட்டிற்கு அழைத்து செல்லப்பட்டது. இந்த நிலையில் தாய்வழி பாட்டி வீட்டில் இருந்து முதல் முதலாக தனது வீட்டிற்கு வரும் பேத்தியை வாடகைக்கு ஹெலிகாப்டர் எடுத்து முதியவர் அழைத்து வந்தார். பெண் குழந்தையை ஹெலிகாப்டரில் அழைத்து வந்த சம்பவம் அப்பகுதி மக்களின் கவனத்தை ஈர்த்தது.
Tags:    

மேலும் செய்திகள்