மனிதர்களை தாக்கும் யானைகள்...2 ஆண்டுகளில் 1061 பேர் உயிரிழப்பு - மத்திய வனத்துறை தகவல்

வன விலங்குகள் தாக்கி மனிதர்கள் உயிரிழப்பதை மத்திய அரசு கவனத்தில் எடுத்துள்ளதா? என்ற கேள்விக்கு மத்திய வனத்துறை இணை அமைச்சர் அஷ்வினி குமார் சௌபே பதில் அளித்துள்ளார்.

Update: 2022-03-22 09:43 GMT
வன விலங்குகள் தாக்கி மனிதர்கள் உயிரிழப்பதை மத்திய அரசு கவனத்தில் எடுத்துள்ளதா? என்ற கேள்விக்கு மத்திய வனத்துறை இணை அமைச்சர் அஷ்வினி குமார் சௌபே பதில் அளித்துள்ளார். அதில் இந்தியா முழுவதும் 2020 ஆம் ஆண்டில் 53 பேரும், 2021 ஆம் ஆண்டில் 14 பேரும் புலிகள் தாக்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் ஆந்திர பிரதேசம், சட்டீஸ்கர், ஜார்கண்ட், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் 2019-2020ம் ஆண்டில் 594 பேர் யானைகள் தாக்கி உயிரிழந்துள்ளதாக மத்திய வனத்துறை தெரிவித்துள்ளது. இதேபோல் 2020-2021ஆம் ஆண்டில் 467 பேர் யானைகள் தாக்கி உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த 2 ஆண்டுகளில் தமிழகத்தை சேர்ந்த 115 பேர் யானைகள் தாக்கியதில் பலியானதாகவும் மத்திய இணை அமைச்சர் அளித்த பதிலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்