ஹிஜாப் அணிய தடை தொடரும் - கர்நாடக நீதிமன்றம்

ஹிஜாப், இஸ்லாமியர்களின் மத நடைமுறையில் அத்தியாவசிய ஒன்றாக இல்லை என கர்நாடக உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.

Update: 2022-03-15 11:15 GMT
கர்நாடக மாநிலம் உடுப்பியில் உள்ள ஜூனியர் கல்லூரியில், இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்துவர ஜனவரி மாதம் தடை கூறப்பட்டது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் இது பரவிய நிலையில், காவித்துண்டு அணிந்து வந்த ஒருபிரிவினர், ஹிஜாப் அணிவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஜெய்ஸ்ரீராம் முழக்கம் எழுப்பினர். அவர்களுக்கு, அல்லாஹூ அக்பர் என பதில் முழக்கம் முன்வைக்கப்பட்டது.

இதனிடையே, ஹிஜாப் அணிவது அரசியல்சாசன சட்டப்படியான அடிப்படை உரிமை,  என மாணவிகள் உள்ளிட்டோர், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். 

வழக்கு விசாரணையில், ஹிஜாப் அணிய எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றும், சீருடை சட்டப்படி நடப்பதை இந்தியா விரும்புவதாகவும் கர்நாடக அரசு வாதத்தை முன்வைத்தது.

வாதங்களை கேட்ட கர்நாடக உயர் நீதிமன்றம், இஸ்லாமியர் ஹிஜாப் அணிவது, அவர்களின் மத நடைமுறையில் கட்டாய ஒன்றல்ல,  அரசின் சீருடை சட்டத்துக்கு அனைவரும் ஒன்று எனக் கூறி அனைத்து வழக்குகளையும் முடித்து வைத்தது.​

இதனிடையே, நாளை வரை பள்ளி, கல்லூரிகள் விடுமுறை அறிவிக்கப்பட்ட உடுப்பி உள்ளிட்ட மாவட்டங்களில் 144 தடை உத்தரவு, அமலாகி உள்ளது. பெங்களூருவில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்த நிலையில், கூட்டம் கூடவும் தடை விதித்துள்ளனர். 

மங்களூருவில் 19ஆம் தேதி வரை கூட்டம்கூட தடை விதித்துள்ளனர். 
Tags:    

மேலும் செய்திகள்