முதல்வர் சித்தராமையா மனைவி பார்வதியின் திடீர் அறிவிப்பு - பரபரக்கும் கர்நாடகா

Update: 2024-10-02 04:06 GMT

கர்நாடகாவில் முடா வழங்கிய நிலங்களை திருப்பி அளிப்பதாக முதல்வர் சித்தராமையா மனைவி ஆணையரிடம் கடிதம் அளித்துள்ளார்.

மைசூர் நகர மேம்பாட்டு ஆணையம் கேசாரே கிராமத்தில் சித்தராமையா மனைவி பார்வதிக்கு சொந்தமான இடத்தை கையகப்படுத்தியது. அதற்கு மாற்றாக விஜயநகராவில் 14 கிரவுண்ட் நிலம் வழங்கப்பட்டது. கையகப்படுத்தப்பட்ட நிலத்தின் மதிப்பைவிட பல மடங்கு அதிகம் மதிப்புள்ள நிலம் சித்தராமையா மனைவிக்கு வழங்கப்பட்டது எனவும், சித்தராமையா அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாக எழும்பிய குற்றச்சாட்டுகளில் அவருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த சூழலில் முடா வழங்கிய 14 நிலங்களையும் திரும்பி வழங்குவதாக பார்வதி அறிவித்ததும், இதுகுறித்த கடிதத்தை மைசூர் நகர மேம்பாட்டு ஆணையத்தில் சித்தராமையா மகன் யதீந்திரா வழங்கினார். அப்போது வழக்கு நிலுவையில் இருப்பதால் சட்ட ஆலோசனையை பெற்று நடவடிக்கை எடுப்பதாக மூடா ஆணையர் ரகுநந்தன் தெரிவித்துள்ளார். இதுபோன்ற சம்பவம் அரங்கேறியது இல்லை, ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்போம் என்றவர், அமலாக்கப்பிரிவு தரப்பில் ஆவணங்கள் எதுவும் கேட்கப்படவில்லை எனவும் விசாரணைக்கு ஒத்துழைப்பு அழிப்போம் என்றும் குறிப்பிட்டார். 

Tags:    

மேலும் செய்திகள்