பி.எப் வட்டி குறைப்பினால் ஏற்படும் விளைவுகள் என்ன ? - ஒரு அலசல்

தொழிலாளர்கள் வருங்கால வைப்பு நிதி எனப்படும் பி.எப் மீதான வட்டி 8.5 சதவீதத்தில் இருந்து 8.1 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதால் தொழிலாளர்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறைந்துள்ளது.

Update: 2022-03-15 10:59 GMT
நாடு முழுவதும் சுமார் 7 லட்சம் நிறுவனங்களில் பணியாற்றும் 6.42 கோடி பணியாளர்களை உறுப்பினர்களாக கொண்ட பி.எப் திட்டத்தில், தற்போது  14 லட்சம் கோடி ரூபாய் வைப்பு நிதியாக சேர்ந்துள்ளது.

உதாரணமாக ஒரு  உறுப்பினரின் பி.எப் கணக்கில் மொத்தம் 5 லட்சம் ரூபாய் இருந்தால், அவருக்கு கடந்த நிதியாண்டில், 8.5 சதவீத வட்டி அடிப்படையில், 42,500 ரூபாய் வட்டித் தொகை கிடைக்கும்.

நடப்பு நிதியாண்டிற்கான வட்டி விகிதம் 8.1 சதவீதமாக தற்போது குறைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த 5 லட்சம் ரூபாய் தொகைக்கு இனி ஆண்டுக்கு 40,500 ரூபாய் மட்டுமே வட்டியாக கிடைக்கும்.

5 லட்ச ரூபாய் சேமிப்பிற்கு ஆண்டுக்கு இதனால் 2,000 ரூபாய் வட்டி இழப்பு ஏற்படும்.

Tags:    

மேலும் செய்திகள்