தடுப்பூசி செலுத்தியத்தில் 180 கோடியை தாண்டியது இந்தியா - மத்திய சுகாதார அமைச்சகம் தகவல்

கொரோனா தொற்று பாதிப்பை தடுக்கும் விதமாக இரு விதமான தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

Update: 2022-03-13 05:05 GMT
கொரோனா தொற்று பாதிப்பை தடுக்கும் விதமாக இரு விதமான தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. கோவேக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திய நிலையில், தற்போது, கொரோனா தொற்று பரவல் மற்றும் பாதிப்பு கட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளது. இளைஞர்கள், முதியவர்கள், இணை நோய் உள்ளோர் என வகைப்படுத்தி செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசி, தற்போது, 15 வயதுக்கு கீழ் உள்ளோருக்கும் செலுத்தப்படுகிறது. பூஸ்டர் தடுப்பூசியும் செலுத்தப்படும் நிலையில், இரு தவணை தடுப்பூசியும் சேர்த்து மொத்தம் 180 கோடியே, 10 லட்சத்து 69 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்