காங். கட்சிக்கு முழு நேர தலைவர் தேர்வு? - சோனியா காந்தி தலைமையில் இன்று ஆலோசனை

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் டெல்லியில் சோனியா காந்தி தலைமையில் இன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது.

Update: 2022-03-13 01:23 GMT
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் டெல்லியில் சோனியா காந்தி தலைமையில் இன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது.நடந்து முடிந்த உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவை தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்துள்ளது. இந்நிலையில் இன்று மாலை 4 மணிக்கு கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி தலைமையில் காங்கிரஸ் செயற்குழு 
கூட்டம் கூடுகிறது. இதில் காங்கிரஸ் கட்சியின் செயல்பாடு,  தேர்தல் தோல்வி உள்ளிட்டவை குறித்தும், கட்சிக்கு முழு நேர தலைவரை தேர்வு செய்வது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது.
Tags:    

மேலும் செய்திகள்