பேடிஎம் சேவைக்கு தடை - ரிசர்வ் வங்கி அதிரடி

பேடிஎம் சேவைக்கு தடை - ரிசர்வ் வங்கி அதிரடி பேடிஎம் சேவை வங்கியில் புதிய வாடிக்கையாளர்களை சேர்க்க ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது.

Update: 2022-03-12 13:18 GMT
நொய்டாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பேடிஎம், இந்தியாவில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தணையில் முன்னணியில் உள்ளது. சிறிய பெட்டிக்கடை முதல் வணிக வளாகங்கள் வரை பண பரிவர்த்தனைக்கு பேடிஎம் சேவை பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், பரிவர்த்தனை விதிமுறைகளை முறையாக கடைப்பிடிக்காத காரணத்தால் பேடிஎம் மீது ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது. பேடிஎம் பரிவர்த்தனை வங்கியில் புதிய வாடிக்கையாளர்கள் இணைய ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது. மேலும் பேடிஎம் பரிவர்த்தனைகள் மற்றும் தகவல் தொழில்நுட்பத்தை விரிவாக தணிக்கை செய்ய ஐடி தணிக்கை நிறுவனத்தை நியமிக்கவும் ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. இந்த ஆய்வுக்கு பிறகு வரும் அறிக்கையை கொண்டு புதிய வாடிக்கையாளர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்