"தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் குற்றவாளிகள்" "குற்றவாளிகளை பிடிக்க உதவும் அதே தொழில்நுட்பம்"

குற்றவாளிகள் தொழில்நுட்பத்தை பயன்படுத்தினால் அதே தொழில்நுட்பத்தை கொண்டு குற்றவாளிகளை பிடிக்கவும் முடியும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

Update: 2022-03-12 12:30 GMT
குற்றவாளிகள் தொழில்நுட்பத்தை பயன்படுத்தினால் அதே தொழில்நுட்பத்தை கொண்டு குற்றவாளிகளை பிடிக்கவும் முடியும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இரண்டு நாள் பயணமாக குஜராத் சென்றுள்ள பிரதமர் மோடி காந்திநகரில் உள்ள தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழக கட்டிடத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தார். தொடர்ந்த நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், மாணவர்களுக்கு பட்டங்களையும் சான்றிதழ்களையும் வழங்கினார். பின்னர் நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி, நாட்டின் பாதுகாப்பு கருவிகளில் பல்வேறு சீர்திருத்தங்கள் தேவை பட்டதாகவும் புதிய சவால்களை எதிர்கொள்ள மக்களுக்கு தேவையான பயிற்சிகளை வழங்க வேண்டும் என குறிப்பிட்டார். காவல்துறையினர் மற்றும் பாதுகாப்பு படையினர் குறித்து பொது மக்களுக்கு இருக்கும் அபிப்ராயத்தை மாற்ற வேண்டும் என குறிப்பிட்ட பிரதமர், கொரோனா கால கட்டத்தில் காவல்துறையினரின் நேர்மறையான செயல்பாடுகள் குறித்த வீடியோக்கள் இணையதளங்களில் பரவியதாக குறிப்பிட்டார். பாதுகாப்பு மற்றும் காவல்துறை பணிகளில் தொழில்நுட்பத்தின் பங்களிப்பை வலியுறுத்திய பிரதமர், குற்றவாளிகள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தினால் அதே தொழில்நுட்பத்தை பயன்படுத்தி குற்றவாளிகளை பிடிக்கவும் முடியும் என்றார். குற்றவாளிகளின் உளவியலை அறிந்து கொண்டு அவர்களின் வாழ்க்கையை மாற்றும் மனோதத்துவ நிபுணர்கள் நமக்கு தேவை என குறிப்பிட்ட பிரதமர் மன அழுத்தத்தை எதிர்கொள்ள பாதுகாப்பு படைகளில் யோகா நிபுணர்களின் பங்களிப்பு தேவை என குறிப்பிட்டார்.
Tags:    

மேலும் செய்திகள்