"பல்வேறு துறைகளில் வேலை வாய்ப்புகள்" "இளைஞர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்"

பல்வேறு துறைகளில் மத்திய அரசு வாய்ப்புகளை வழங்கி வருவதாகவும் அதனை இளைஞர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.

Update: 2022-03-07 02:42 GMT
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் சிம்பையாசிஸ் பல்கலைக்கழகத்தின் பொன்விழா கொண்டாட்டங்களை பிரதமர் துவக்கி வைத்தார்.
பின்னர் மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய பிரதமர் மோடி, உலகிலேயே மிகப்பெரிய பொருளாதாரத்தை கொண்ட நாடாக இந்தியா விளங்குவதாகவும் உலகிலேயே ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கான சூழலைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா மூன்றாவது மிகப் பெரிய நாடாக விளங்குவதாக குறிப்பிட்டார். ஸ்டாண்ட் அப் இந்தியா, மேக் இன் இந்தியா, தற்சார்பு பாரதம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் இளைஞர்களின் விருப்பங்களை பிரதிபலிப்பதாக பிரதமர் மோடி குறிப்பிட்டார். 
இளைஞர்கள் நாட்டுக்காகவும் சில இலக்குகளை நிர்ணயிக்க வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார். இளைஞர்கள் மற்றும் அவர்களின் வலிமையை சார்ந்தே அரசு இயங்கிக் கொண்டிருப்பதாக குறிப்பிட்ட பிரதமர் இளைஞர்களுக்காகவே, பல்வேறு துறைகள் திறக்கப்பட்டு வருவதாகவும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார். 

Tags:    

மேலும் செய்திகள்