பெண்களை குறிவைத்து கைவரிசை - பணம், நகைகளை பறித்த இளைஞர் கைது

ஆந்திராவில் சமூக வலைதளங்களில் உள்ள பெண்களை குறிவைத்து பழகி பின்னர் அவர்களை மிரட்டி பணம் பறித்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்

Update: 2021-08-03 13:53 GMT
ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் பொதட்டூரை சேர்ந்தவர் பிரசன்ன குமார்.. சில நாட்களுக்கு முன்பாக இவர், திருட்டு வழக்கு ஒன்றில் போலீசாரால் கைது செய்யப்பட்டார். அப்போது அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. 

எந்த நேரமும் சமூக வலைதளங்களில் உலா வரும் இவர், பெண்களிடம் தேடித் தேடி பழகுவதை வழக்கமாக வைத்துள்ளார்... இணையத்தில் உள்ள பெண்களிடம் நட்பு என்ற பெயரில் பேச ஆரம்பிக்கும் இவர், கடைசியில் அவர்களை எளிதாக காதல் வலையில் வீழ்த்தியுள்ளார்.

பெண்களிடம் நிர்வாண படங்களை கேட்கும் போது அவர்களும் அதை அனுப்பி வைத்ததே அத்தனை பிரச்சினைக்கும் ஆதாரமாக அமைந்துள்ளது.  நிர்வாண படங்கள் தன் கைக்கு வந்த உடனே, தன் சுய ரூபத்தை காட்ட தொடங்கி இருக்கிறார் பிரசன்னா குமார். 

அந்த படங்களை இணையத்தில் வெளியிட்டு விடுவதாக கூறி மிரட்டும் அவர், அதை சொல்லியே பெண்களிடம் நகை, பணத்தை அபகரித்துள்ளார். இதற்காக இன்ஜினியரிங் படிப்பை பாதியில் நிறுத்தும் அளவுக்கு பிரசன்ன குமாருக்கு காசு கண்ணை மறைத்திருக்கிறது...

ஏராளமான பெண்களை ஏமாற்றியதை அவர் போலீசாரிடம் ஒப்புக் கொண்ட நிலையில் அவரிடம் இருந்த ஒரு லட்சத்து 26 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் 30 கிராம் நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இவரால் ஏமாற்றப்பட்ட பெண்கள் யார் யாரென்றும் விசாரணை நடத்தி வரும் போலீசார், பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்க முன்வருமாறு வலியுறுத்தி உள்ளனர். 

சமூக வலைதளங்களில் எதெல்லாம் நமக்கு ஆபத்து என போலீசார் எச்சரித்தாலும் கூட, அறியாமல் பெண்கள் செய்யும் தவறு பல பிரசன்ன குமார்களை உருவாக்கி கொண்டிருக்கிறது.... 
Tags:    

மேலும் செய்திகள்