மணப்பெண் கோலத்தில் வந்த மணமகன்; மணமகன் போல் ஒப்பனை கொள்ளும் மணமகள்-காலங்காலமாக தொடந்து வரும் வழக்கம்

ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் குறிப்பிட்ட பிரிவு மக்களால் நடத்தப்படும் விநோத திருமண சடங்கு, கவனத்தை ஈர்த்துள்ளது

Update: 2021-06-28 05:48 GMT
ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் குறிப்பிட்ட பிரிவு மக்களால் நடத்தப்படும் விநோத திருமண சடங்கு, கவனத்தை ஈர்த்துள்ளது… அப்படி என்ன செய்கிறார்கள், பார்க்கலாம்… திருமணத்தை ஆயிரங்காலத்துப் பயிர் என்பார்கள்.வெறுமனே ஆணும், பெண்ணும் இணையும் நிகழ்வாக அன்றி, வாழ்வின் ஒப்பற்ற தொடக்கமாகவே திருமணம் பார்க்கப்படுகிறது. அந்த வகையில், ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் உள்ள செர்லோபள்ளி கிராமத்தில் நடைபெற்ற விநோத முறையிலான திருமணம், பலரையும் வியப்பில் ஆழ்த்தி இருக்கிறது. மணமகன் மணமகள் கோலத்திலும், மணமகள் மணமகனைப் போலவும் தயாராகி, திருமண சடங்குகள் நிறைவேற்றப் பட்டதே இதற்குக் காரணம், செர்லோபள்ளி, தரிமடுகு, தேஷினேனிபள்ளி, மாவுட்டூர், ஜங்கங்குண்ட்லா ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மக்கள், தங்கள் குலதெய்வ வழக்கமாக, இந்தத் திருமண முறையை காலங்காலமாக தொடர்ந்து வருகின்றனர். எத்தனை பெரிய அதிகாரியாக இருந்தாலும், பெண் வேடமிட்டு, மணமகன் போல் மாறி நிற்கும் மணமகளுக்கு தாலி கட்ட வேண்டும் என்பது இவர்கள் பின்பற்றும் விதிமுறை.பலநூறு ஆண்டுகளாக தொடர்ந்து வரும் இந்த வழக்கத்தை, இம்மக்கள் இதுவரையும் கைவிடாதது, வியப்பின் உச்சம். நாகரிகம் வளர்ந்து வரும் உலகில், மணக்கோலத்தில் மாறுபட்ட வழியை தொன்றுதொட்டு பின்பற்றும் வழக்கம், வியப்பூட்டுவதில் ஆச்சர்யமில்லை.

Tags:    

மேலும் செய்திகள்