டெல்லியில் மார்ச் 31 வரை பள்ளி, கல்லூரிகள் மூடல் - டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக டெல்லியில் வரும் 31 ஆம் தேதி வரை பள்ளி, கல்லூரிகள் மற்றும் திரையரங்குகள் மூடப்படும் என்று முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

Update: 2020-03-12 13:26 GMT
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக டெல்லியில் வரும் 31 ஆம் தேதி வரை பள்ளி, கல்லூரிகள் மற்றும் திரையரங்குகள் மூடப்படும் என்று முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். தேர்வுகள் நடைபெறும் வகுப்புகளை தவிர மற்ற பள்ளி-கல்லூரி மாணவர்களுக்கு விடுமுறை விடப்படும் என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார். முன்னதாக, கொரோனா தாக்குதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக, துணைநிலை ஆளுநரை, அரவிந்த் கெஜ்ரிவால் சந்தித்து பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்