"வர்த்தக பற்றாக்குறையை ஈடு செய்த அமெரிக்கா"

அமெரிக்க அதிபர் டிரம்ப் உடன், இந்தியா- அமெரிக்கா இடையிலான வர்த்தக சிக்கல்கள் குறித்த பேச்சுவார்த்தை நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 3 வர்த்தக ஒப்பந்தங்களில் இந்தியா ஈடுபட்டுள்ளது.

Update: 2020-02-25 18:19 GMT
இந்தியா - அமெரிக்கா இடையே பாதுகாப்பு, எரிசக்தி, தொலைத்தொடர்பு உள்ளிட்ட துறைகளில் 3 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.

பாதுகாப்பு துறையில் ஒத்துழைப்பை மேம்படுத்தும் வகையில், அமெரிக்காவில் இருந்து ராணுவ ஹெலிகாப்டர்கள் வாங்க 21 ஆயிரத்து 606 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் இருந்து எண்ணெய் எரிவாயு இறக்குமதி செய்ய, ஒரு லட்சத்து 42 ஆயிரம் கோடி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

உலக அளவில், இணையதள சேவைகளை அதிகம் பயன்படுத்தும் சந்தையாக இந்தியா உள்ள நிலையில், பாதுகாப்பான 5ஜி தொழில்நுட்ப சேவையை அளிப்பது குறித்து ஆலோசித்தோம் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் இருந்து இந்தியா இறக்குமதி செய்யும் வர்த்தக பற்றாக்குறை ஒரு லட்சத்துக்கு 60 ஆயிரம் கோடி ரூபாயாக உள்ள நிலையில், டிரம்ப் தனது இந்திய பயணத்தில் அதை ஈடு செய்துவிட்டார் என்பதே தொழில்துறையினரின் கருத்தாக உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்