ஜம்மு காஷ்மீர் குண்டு வீச்சில் 2 பேர் பலி, 32 படுகாயம் : ரூ.10 ஆயிரத்திற்காக ஏழை இளைஞர் துணிகரம்

ஜம்மு காஷ்மீரில் உள்ள பேருந்து நிலையத்தில் நடைபெற்ற குண்டு வீச்சில் இரண்டு பேர் உயிரிழந்தனர்.

Update: 2019-03-09 05:45 GMT
ஜம்மு காஷ்மீரில் உள்ள பேருந்து நிலையத்தில் நடைபெற்ற குண்டு வீச்சில் இரண்டு பேர் உயிரிழந்தனர். இதில் 32 பேர் காயமடைந்துள்ள நிலையில், கையெறி குண்டை வீசிய யாசிர் அகமது என்ற இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். விசாரனையில், குல்காம் மாவட்ட ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத இயக்க தளபதி, பத்தாயிரம் ரூபாயை கூலியாக பேசி அவரிடம் குண்டு வீச சொல்லியிருப்பது தெரியவந்துள்ளது. முன்னதாக பலத்த சோதனை சாவடிகளுக்கு இடையே, யாசிர் கையெறி குண்டை பிரியாணி நிரப்பிய டிபன் பாக்சில் மறைத்து வைத்து எடுத்து வந்ததும் தெரியவந்துள்ளது.
   
Tags:    

மேலும் செய்திகள்