அகமதாபாத் கண்காட்சியில் ஆடை வாங்கிய பிரதமர்
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெறும் அமதாவாத் கண்காட்சியில் ரூபே கார்டை பயன்படுத்தி பிரதமர் நரேந்திர மோடி, ஓவர்கோட் வாங்கினார்.
குஜராத் மாநிலத்தில் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அகமதாபாத்தில், சர்தார் வல்லபாய் பட்டேல் மருத்துவ அறிவியல் பயிற்சியகத்தை திறந்து வைத்தார். பின்னர், காந்திநகரில் சர்வதேச வர்த்தக கண்காட்சியை, அவர் துவக்கி வைத்தார். இந்த விழாவில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, கல்வி, மருத்துவம் மற்றும் சுகாதார கல்வித்துறையில் கடந்த 4 வருடங்களாக, 18 ஆயிரத்திற்கும் மேம்பட்ட எம்.பி.பி.எஸ் சீட்களும், 13 ஆயிரம் முதுகலை பட்டதாரி இடங்களும் கூடுதலாக உருவாக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
பின்னர் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெறும் அமதாவாத் கண்காட்சியில் ரூபே கார்டை பயன்படுத்தி பிரதமர் நரேந்திர மோடி, ஓவர்கோட் வாங்கினார்.