அசாதாரண இதய துடிப்பு நோய்க்கு ஸ்மார்ட் டச் தொழில்நுட்ப முறையில் புதிய சிகிச்சை
அசாதாரண இதய துடிப்பு நோயால் பாதிக்கப்பட்டவருக்கு சென்னை அப்பலோ மருத்துவமனையில் புதிய தொழில் நுட்ப முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
அசாதாரண இதய துடிப்பு நோயால் பாதிக்கப்பட்டவருக்கு சென்னை அப்பலோ மருத்துவமனையில் புதிய தொழில் நுட்ப முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
ஒருவருக்கு இதய துடிப்பு வழக்கத்திற்கு மாறாக வேகமாகவோ, குறைவாகவோ இருந்தால் அது அசாதாரண இதய துடிப்பு என கருதப்படுகிறது.இதய துடிப்பு அதிகமாகும் போதோ அல்லது குறையும் போதோ மயக்கம் ஏற்படும். இந்த சிக்கலுக்கு மருந்துகள் மூலம் நிரந்தர தீர்வு கிடைப்பது சாத்தியமில்லை. வயது முதிர்வு, சர்க்கரை நோய், ஹைபர் டென்ஷன் காரணமாக இந்த நோய் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.இந்த நோயால் பாதிக்கப்பட்டிருந்த பண்ருட்டியை சேர்ந்த 47 வயதான பாலமுருகனுக்கு சென்னை அப்பலோ மருத்துவமனையில், smart touch technology என்ற தொழில்நுட்பம் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இது வழக்கமாக செய்யப்படும் ஒபன் ஹார்ட் சர்ஜரி இல்லை என்றும், இதயத்தில் பாதிக்கப்பட்ட பகுதியை துல்லியமாக கண்டறிந்து, அதை அப்புறுத்துவது என அப்பலோ மருத்துவர்கள் தெரிவித்தனர்.