நெல்லையில் வணிக நிறுவனங்கள் பாதாள சாக்கடை இணைப்புகளை முறையாக அமைக்க வேண்டும் என்றும், நீர்நிலைகள் மற்றும் தாமிரபரணி ஆற்றில் கலக்கும் வகையில் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாநகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.நெல்லை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் குழாய்கள் மற்றும் தாமிரபரணி ஆற்றில் வணிக நிறுவனங்களில் கழிவு நீர்கள் கலப்பதாக புகார் எழுந்தது. இதை தொடர்ந்து, நெல்லை மாநகராட்சி சார்பாக இரண்டு நாட்களில் 327 வணிக கட்டிடங்கள் ஆய்வு செய்யப்பட்டு, விதிமுறைகளை மீறிய 82 நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மேலும், பாதாள சாக்கடை குழாயை நேரடியாக குளங்கள் மற்றும் ஆற்றில் கலந்த ஆறு நிறுவனங்களுக்கு அறுபது ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.