டிஸ்சார்ஜின் போது ரூ.15,000 கேட்டு கேள்வி எழுப்ப எழுப்ப குறைந்த கட்டணம்..
சென்னையில் தனியார் மருத்துவமனையில் அதிக கட்டணம் வசூலிப்பதாகவும், அடியாட்களை வைத்து மிரட்டுவதாகவும் நோயாளிகளின் உறவினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
சென்னை தண்டையார்பேட்டையைச் சேர்ந்த உமா மகேஷ்வரன் என்பவரின் தாயார் இந்துமதி. கடந்த 8ஆம் தேதி இதய வலி ஏற்பட்டதால், ராயபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், அறுவை சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யும்போது, 83 ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்த கூறியதாக தெரிகிறது. இதற்கான ரசீது வழங்குமாறு உமா மகேஷ்வரன் கேட்டபோது, மருத்துவமனை நிர்வாகம் முன்னுக்குப் பின் முரணான பதில்களை அளித்தாக கூறப்படுகிறது. வழக்கறிஞர்களுடன் கேள்வி எழுப்பியபோது, மருத்துவமனை நிர்வாகம் அடியாட்களை வைத்து மிரட்டியதாக குற்றம்சாட்டினர். இதுகுறித்து உமா மகேஷ்வரன் புகார் அளித்ததை அடுத்து, போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.