அனைத்து சபரிமலை பக்தர்களும் முதல் வேலையாக கட்டாயம் செய்ய வேண்டியது இதான்.. மிஸ் பண்ணிடாதீங்க

Update: 2024-11-14 07:01 GMT

'சுவாமி ஏஐ சாட்பாட்' செயலிக்கான இலச்சினையை கேரள முதல்வா் பினராயி விஜயன் நேற்று வெளியிட்டார். ஏஐ மூலம் ஐயப்ப பக்தா்களுக்குத் துல்லிய தகவல்களை வழங்கும் வகையில் இந்த செயலியை முத்தூட் குழுமத்தின் ஒத்துழைப்போடு பத்தனம்திட்டா மாவட்ட நிர்வாகம் உருவாக்கியுள்ளது.'சுவாமி ஏஐ சாட்பாட்' செயலியை பக்தா்கள் தங்கள் அறிதிறன்பேசிகளில் நிறுவி, ஏஐ மூலம் உரையாடலில் தகவல்களைக் கேட்டு பெறலாம் என்றும் பூஜை நேரங்கள், ரயில் மற்றும் விமான நிலைய வசதிகள் பற்றிய விரிவான தகவல்களை மலையாளம், தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் சாட்பாட் வழங்கும் எனவும் கூறப்பட்டுள்ளது. இந்தாண்டு, சபரிமலைக்கு வரும் ஐயப்ப பக்தர்களுக்கு, மிகவும் வசதியான துல்லியமான மற்றும் பாதுகாப்பான பயண அனுபவத்தை சாட்பாட் செயலி உறுதி செய்யும் என நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்