கமல் ஹாசன் தனக்கு அளிக்கப்பட்ட உலகநாயகன் பட்டத்தைத் தவிர்க்கும்படி விடுத்த வேண்டுகோளை, கமல் ஆளும் கட்சியான திமுகவின் மிரட்டலால் தான் பட்டத்தைத் துறந்ததாக தமிழிசை கணித்துள்ளதை கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது... கமல் மிரட்டலுக்கு அஞ்சுபவர் அல்ல என்பதை தமிழிசை, அவரது தலைவரை கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும் என்றும், முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிரட்டும் போக்குள்ள அரசுமல்ல என்றும், கமல் உலகநாயகன் பட்டத்தை துறந்தது தன்னை ஈடுபடுத்திக்கொண்ட கலைத்துறையில் முழுமை பெற்ற ஞானத்தின் வெளிப்பாடு எனவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.. மத்திய அமைச்சராகிவிடலாம் என்ற கனவில், தன்னிடம் இருந்த ஆளுநர் பதவியையும் பறிகொடுத்து நிற்கும் தமிழிசைக்கு இதைப் புரிந்து கொள்ளும் பக்குவம் இல்லை என்பது வருத்தத்திற்குரியது என்று மக்கள் நீதி மய்யம் விமர்சித்துள்ளது.