நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா ரஜினிகாந்துக்கு எதிரான மனு.. தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்

Update: 2024-01-17 22:23 GMT

வேலையில்லா பட்டதாரி திரைப்பட விவகாரத்தில் நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உள்ளிட்டோருக்கு எதிரான மேல்முறையீடு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

வேலையில்லா பட்டதாரி திரைப்படத்தில், நடிகர் தனுஷ் புகைபிடிப்பது போன்ற காட்சிகள் வரும் போது, திரையில் இடம்பெற வேண்டிய எச்சரிக்கை வாசகம் உரிய முறையில் இடம்பெறாததால், தயாரிப்பு நிறுவனம் மற்றும் நடிகர் தனுஷ் ஆகியோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படி தமிழ்நாடு புகையிலை கட்டுப்பாட்டுக்கான மக்கள் அமைப்பின் சார்பில் 2014ம் ஆண்டு தமிழக அரசிடம் புகார் அளிக்கப்பட்டது. தமிழக அரசின் பொது சுகாதாரத்துறை துணை இயக்குனர், சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் தயாரிப்பாளர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மற்றும் நடிகர் தனுசுக்கு எதிராக புகார் அளித்திருந்தார். விசாரணைக்கு தடை விதிக்க கோரியும், புகாரை ரத்து செய்யக் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது... இந்த மனுக்கள் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தபோது, படத்துக்கு தணிக்கை வாரியம் சான்றளித்துள்ள நிலையில் தங்களுக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் கோரப்பட்டது. இந்த மனுக்கள் மீது கடந்த ஜூலையில் தீர்ப்பளித்த நீதிபதி, சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார். சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவு சரியே அதில் தலையிட வேண்டிய அவசியம் இல்லை என தெரிவித்து மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்