உலகமெங்கும் தீபாவளி முதல் 'அமரன்'

Update: 2024-10-23 15:39 GMT

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் மற்றும் மகேந்திரன் இணைந்து தயாரிக்கும் அமரன் திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார். இந்திய ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு அமரன் திரைப்படம் உருவாகியுள்ளது. போரில் உயிர்நீத்த மேஜர் முகுந்த் வரதராஜனுக்கு, இந்தியாவின் மிக உயர்ந்த விருதுகளில் ஒன்றான அசோக சக்ரா விருது வழங்கப்பட்டது. முகுந்த் வரதராஜனாக சிவகார்த்திகேயனும், முகுந்த் வரதராஜனின் மனைவி ரெபெக்கா வர்க்கீஸாக சாய் பல்லவியும் நடித்துள்ளனர். காஷ்மீரின் சவால்மிக்க நிலப்பகுதிகளில், அதிரடியான சண்டைக்காட்சிகளுடன் படமாக்கப்பட்டுள்ளது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அமரன் திரைப்படம், தீபாவளி தினமான அக்டோபர் 31-ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.

Tags:    

மேலும் செய்திகள்