ஒரே ஒரு தமிழ் படம்.. ஒட்டுமொத்த இந்திய சினிமாவும் தரைமட்டம்! - ராஜ கிரீடமான `மகாராஜா’

Update: 2024-08-22 11:37 GMT

சிறந்த கதையம்சம் கொண்ட படங்களை தேர்வு செய்யும் விஜய்சேதுபதி மகாராஜாவை தொடர்ந்து மற்றொரு வித்தியாச கதைக்களம் கொண்ட படத்தில் கமிட் ஆகியுள்ளார். இதுகுறித்து பார்க்கலாம் விரிவாக...

வித்தியாச கதைக்களம், எதார்த்தமான நடிப்பு, சிறந்த கதையம்சம் என தனது படங்களால் ரசிகர்களை வியக்க வைக்க தவறியதில்லை விஜய் சேதுபதி...

சுந்தரபாண்டியனில் வில்லனாக தொடங்கிய விஜய் சேதுபதியின் வெற்றிப் பயணம் அவரின் கதை selection-காகவே அவரை மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்தது...

இவரா இது என வியக்கும் அளவிற்கு கதாபாத்திரத்திற்கு ஏற்றப்படி தன்னை வடிவமைத்துக் கொள்ளும் விஜய் சேதுபதி, ஒவ்வொரு கதைக்கும் தன்னை தகவமைத்துக் கொள்வதில் தவறியதேயில்லை...

சூப்பர் டீலக்ஸ், சீதக்காதி, கடைசி விவசாயி என ஒவ்வொரு படத்திலும் தனது உழைப்பை கொட்டியிருப்பார் விஜய் சேதுபதி..

இச்சூழலில் தான், வித்தியாச கதைக்களம் கொண்ட மற்றொரு படத்திற்காக ஆயத்தமாகி வருகிறார்.. பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நித்யா மேனன் காம்போவில் ஒரு படம் தயாராகி வருகிறது..

விஜய் சேதுபதியின் 52வது படமான இத்திரைப்படத்தில், பரோட்டா மாஸ்டராக நடிக்கிறாராம். இதற்காக, கடந்த சில வாரங்களாக கடுமையான பயிற்சி மேற்கொண்டு இருக்கிறார்...

பயிற்சி பெற்றதோடு நிற்காமல், ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்தவர்களுக்கு தனது கையால் பரோட்டா சுட்டுக்கொடுத்து அசத்தியுள்ளார் விஜய் சேதுபதி..

தனது கதாபாத்திரமாகவே வாழவே தொடங்கி விட்டார் என அவரது உழைப்பை படக்குழுவினர் பாராட்டி வர, இவ்விஷயம் தெரிந்த ரசிகர்களும் அவரை புகழ்ந்து தள்ளி வருகின்றனர்.

இப்படி அடுத்தடுத்து பாராட்டுகளை பெற்று வரும் விஜய் சேதுபதியின் மகாராஜா படமும் மறுபக்கம் பாராட்டை குவித்து வருகிறது.

ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற மகாராஜா திரைப்படம், ஓடிடி தளத்தில் மாஸ் காட்டி வருகிறது. இயக்குநர் நித்திலன் இயக்கத்தில் வெளியான மகாராஜா திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி டிரெண்டானது..

உலகளவில் கவனம் பெற்ற படமாக உருவெடுத்த மகாராஜா, 2024ல் அதிக பார்வைகளை கொண்ட படங்களின் வரிசையில் முதலிடத்தை பிடித்துள்ளது.

பாலிவுட் படங்களான க்ரூ, லாபடா லேடிஸ், சைத்தான் உள்ளிட்ட படங்களை மிஞ்சி 1.8 கோடி பார்வைகளை கொண்டு முதலிடத்தில் உள்ளது...

இதுமட்டுமா, காந்தி டாக்ஸ், விடுதலை 2ம் பாகம் என வெயிட்டான படங்களை கையில் வைத்துள்ள விஜய் சேதுபதிக்கு, அடுத்தடுத்தும் பாராட்டுகளே குவியும் என சிலாகித்து வருகின்றனர் அவரது ரசிகர்கள்...

Tags:    

மேலும் செய்திகள்