நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் லால் சலாம் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில், என் அன்பு தாய் ஐஸ்வர்யாவுக்கு என் அன்பு சலாம் என்று படத்தின் இயக்குநர் ஐஸ்வர்யாவுக்கு நடிகரும், அவரது தந்தையுமான ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். இத்திரைப்படம் மிகப்பெரிய வெற்றி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவதாக அவர் தனது எக்ஸ் தள பதிவில் குறிப்பிட்டுள்ளார்.