திருவாரூர் மாவட்டம் திருப்பாம்புரம் சேஷபுரீஸ்வரர் கோவிலில் இசையமைப்பாளர் இளையராஜா சுவாமி தரிசனம் செய்தார். முன்னதாக கோவில் நிர்வாகம் சார்பில் இளையராஜாவுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ஆதி விநாயகரை வழிபட்ட அவர், பின்னர் சேசபுரீஸ்வரர் வண்டுசேர்பூங்குழலி மற்றும் ராகு கேது பகவான் சன்னதிகளிலும் சுவாமி தரிசனம் செய்தனர்.