நடிகை ராஷ்மிகா மந்தனாவின் போலி வீடியோ விவகாரத்தில், இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என, டெல்லி காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. இந்த வழக்கில் புலன் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ள காவல்துறை தரப்பு, குற்றம்சாட்டப்பட்டவர்களை வலைவீசி தேடி வருவதாகவும் விளக்கம் அளித்துள்ளது. இதனிடையே மெட்டா நிறுவனத்திற்கு டெல்லி காவல்துறை கடிதம் எழுதியிருப்பது குறிப்பிடத்தக்கது.