நடிகர் தனுஷுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு முடித்து வைத்த சென்னை உயர்நீதிமன்றம்

Update: 2024-06-14 01:49 GMT

வாடகை வீடு விவகாரத்தில் தலையிட்டதாக நடிகர் தனுஷ் மீது தொடரப்பட்ட வழக்கில், இரு தரப்பினருக்கும் இடையே சமரசம் ஏற்பட்டதால் வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் முடித்து வைத்தது.

சென்னை போயஸ்தோட்டத்தில் நளினா ராமலட்சுமி என்பவருக்கு சொந்தமான வீட்டில் அஜய் குமார் லுனாவத் என்பவர் வசித்து வந்தார். இந்த வீட்டை நடிகர் தனுஷ் வாங்கியுள்ளதால் உடனடியாக காலி செய்யுமாறு, எவ்வித முன்னறிவிப்பும் இன்றி தங்களை வலியுறுத்தியதாக

அஜய் குமார் லுனாவத் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு காணொளி மூலமாக நடிகர் தனுஷ் நீதிமன்றத்தில் ஆஜராகிய நிலையில், இரு தரப்பினருக்கும் இடையே சமரசம் ஏற்பட்டு விட்டதாகவும், வீட்டின் சாவி கடந்த 31ஆம் தேதி அன்று தங்களிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் தனுஷ் தரப்பு வழக்கறிஞர் கூறினார். இதையடுத்து இந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்