மிக்ஜாம் புயல் மற்றும் கனமழை நிவாரண பணிகளுக்காக நடிகர் வடிவேலு 6 லட்சம் ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார்.
மிக்ஜாம் புயல் நிவாரண பணிகளுக்கு உதவுமாறு முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார். இதனையடுத்து அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள், பிரபலங்கள் அடுத்தடுத்து நிவாரண உதவி அளித்து வரும் நிலையில், நடிகர் வடிவேலு அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்து 6 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளார். இந்த தகவலை பகிர்ந்து வடிவேலுக்கு அமைச்சர் உதயநிதி நன்றி தெரிவித்துள்ளார்.