"பெண்ணை பெருமைப்படுத்தி கொண்டாடுவதாகச் சொல்கிறது உலகம்" - நடிகை சோனா ஹைடன் கேள்வி

Update: 2024-03-10 02:02 GMT

மார்ச் 8-ம் தேதி, பெண்களை பெருமைப்படுத்தி கொண்டாடுவதாகச் சொல்கிறது உலகம், ஆனால் யதார்த்தம் அப்படித்தான் இருக்கிறதா? என, நடிகை சோனா ஹைடன் கேள்வி எழுப்பியுள்ளார்.

புதுச்சேரியில் காணாமல் போன, 9 வயது சிறுமி, பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, கைகால்கள் கட்டப்பட்ட நிலையில் சாக்கடையில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட கொடுமை, தீராத வேதனையை தருகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

ஒரு பெண்ணாக இருப்பதென்றால் என்னவென்று கூட அறியாத வயதுள்ள குழந்தையை இப்படி சிதைத்திருப்பது, நாம் நாகரிக சமூகத்தில்தான் வாழ்கிறோமா? என்ற கேள்வியை தருகிறது என்று தெரிவித்துள்ளார். இந்த அவமானகரமான சம்பவம், நம்முடன் மிருகங்களும் வசிப்பதையே காட்டுகின்றன என்று, நடிகை சோனா ஹைடன் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்