இயக்குநர் சாந்தகுமார் இயக்கத்தில் நடிகர் அர்ஜூன் தாஸ் நடித்துள்ள ரசவாதி திரைப்படம் அடுத்த வாரம் வெளியாக உள்ளது. இந்நிலையில் தான் சினிமாவில் இருக்க உறுதுணையாக இருப்பவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது நடிகை ஐஸ்வர்யா லட்சுமி குறித்து பேசிய அர்ஜூன் தாஸ், ஐஸ்வர்யா லட்சுமி நல்ல நண்பர் மட்டுமே... காதல் ஏதும் இல்லை என்றும், தற்போது திருமணம் கிடையாது என்றும் தெரிவித்தார்.