'பீஸ்ட்' ரிலீஸ் தேதி அறிவிப்பு - விஜய் ரசிகர்கள் உற்சாகம்

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள பீஸ்ட் திரைப்படம் ஏப்ரல் 13 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Update: 2022-03-22 13:10 GMT
நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள பீஸ்ட் திரைப்படம் ஏப்ரல் 13 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

மாஸ்டர் திரைப்படத்திற்குப் பிறகு நடிகர் விஜய்யை வைத்து இயக்குநர் நெல்சன் திலீப்குமார் பீஸ்ட் திரைப்படத்தை இயக்கி உள்ளார். இத்திரைப்படத்தில் செல்வராகவன், பூஜா ஹெக்டே, டாம் சாக்கோ, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையில் வெளியான அரபிக் குத்து மற்றும் ஜாலியோ ஜிம்கானா ஆகிய இரண்டு பாடல்களும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தின் அறிவிப்பு வெளியானதிலிருந்தே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவிவந்தது. இந்நிலையில், இத்திரைப்படத்திற்கு தணிக்கைத்துறை யு/ஏ சான்றிதழ் அளித்துள்ள நிலையில் படம் வரும் ஏப்ரல் 13-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்