பூமியில் கால் பதிப்பாரா சுனிதா?..டிராகன் எனும் கடைசி நம்பிக்கை - உலகமே எதிர்பார்த்த முக்கிய அப்டேட்
சுனிதா வில்லியம்ஸ், வில்மோர் இருவரையும் அழைத்துவருவதற்காக, CREW 9 மிஷனின் டிராகன் விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்தை சென்றடைந்தது.ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துடன் நாசா இணைந்து உருவாக்கிய,
CREW 9 மிஷனின் ஃபிரீடம் டிராகன் விண்கலம் புளோரிடாவிலுள்ள கேப் கேனவரல் மையத்திலிருந்து ஃபால்கன் 9 ராக்கெட் மூலம் சனிக்கிழமை இரவு விண்ணில் ஏவப்பட்டது. நிக் ஹாக் Nick Hague, அலெக்சாண்டர் கோர்புனோவ் Aleksandr Gorbunov ஆகிய 2 பேருடன் சென்ற இந்த விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்தை இன்று காலை சென்றடைந்தது. தற்போது சர்வதேச
விண்வெளி நிலையத்தின் கமாண்டராக உள்ள சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட எக்ஸ்பெடிஷன் 72 (Expedition 72) குழுவின் விண்வெளி வீரர்கள் இருவரையும் உற்சாகமாக வரவேற்றனர்.