"பைடனுக்கு பதில் கமலா ஹாரிஸை.." வல்லரசு தேர்தலில் ஒலிக்கும் தமிழ் பெயர் பைடன் கன்பியூசன்..பதறும் சொந்த கட்சி உலகமே உற்று நோக்கும் முடிவு அமெரிக்காவை ஆளப்போவது யார்?

Update: 2024-07-10 10:11 GMT

டிரம்ப் உடனான விவாதத்தில் பைடன் தடுமாறியதால் ஏற்பட்ட பின்னடைவை சமாளிக்க ஜனநாயக கட்சி ஏற்பாடு செய்யும் நிகழ்ச்சிகளிலும் பைடன் சொதப்புவது குறித்து விவரிக்கிறது இந்த தொகுப்பு...

பைடனா...? ட்ரம்பா...? என்ற பிரசாரத்திற்கு மத்தியில் அமெரிக்க அதிபர் தேர்தல் ரேசிலிருந்து, பைடனை நீக்க சொந்த கட்சியினரே குரல் எழுப்ப அமெரிக்க தேர்தல் களம் விறுவிறுக்கிறது...

இந்த எதிர்ப்பு குரல் எழுவதற்கு காரணம் ட்ரம்ப் உடனான நேரடி விவாதத்தில் பைடன் தடுமாறியதே.

ஆனால், என்னைவிட யாரால் வெற்றியை வசமாக்க முடியும்... கடவுளால் மட்டுமே தன்னை தடுக்க முடியும் என்கிறார் பைடன். சிட்டிங் அதிபர் பைடனை போட்டியிலிருந்து விலக்குவது விபரீதமாக முடியும் என கணக்கு போடுகிறது ஜனநாயக கட்சி...

பைடனும் பிரசாரங்களில்... வயசா... எனக்கா... என சவால் விடுகிறார்...

டிரம்ப் விவாதத்தில் பைடன் தடுமாறியதை சரிக்கட்ட மீட்டிங்... பிரஸ் மீட்டிங்கிற்கு ஏற்பாடு செய்கிறது ஜனநாயக கட்சி... ஆனால் அங்கும் பைடன் சொதப்புவதை குடியரசு கட்சியினர் டிரெண்ட் செய்கிறார்கள். வானொலி பேட்டியில்... ஒரு கருப்பின அதிபருடன் பணியாற்றிய முதல் கறுப்பின பெண்மணி தான் என கூறிவிட்டார்...

பைடன்தான் ஒபாமாவிடம் துணை அதிபராக பணியாற்றினார். முதல் கறுப்பின பெண் துணை அதிபர் கமலா ஹாரிஸ் பைடனின் துணை அதிபராக இருக்கிறார்.

சுதந்திர தின நாளில் பைடன் Ho, Ho, Ho Happy Independence Day என பைடன் வாழ்த்து தெரிவித்ததும் டிரெண்ட் ஆகியிருக்கிறது...

Ho, Ho, Ho கிறிஸ்துமஸ்துக்குதான சொல்வார்கள்.. என கமாண்ட்கள் பறக்கிறது. மெடிசனில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பேசிய... பைடன்.... 2020-லும் டிரம்பை வெல்வேன் என்றதும் மற்றொரு சொதப்பலானது.. பின்னர் சுதாரித்துக்கொண்ட பைடன் 2024-லும் வெல்வேன் என கூறி சமாளித்தார் பைடன்...

இப்படி பைடன் தடுமாற, அவரை சொந்த கட்சியினரே விலக சொல்ல, மறுபுறம் பைடனை அரியணைக்கு அழைத்துச் செல்வேன் என ஆவேசமாக களமிறங்கியிருகிறார் ஜில் பைடன்...

இத்தனை பிரச்சினைக்கும் மத்தியில் வெள்ளை மாளிகைக்கு நரம்பியல் நிபுணர் அடிக்கடி வருவதாக செய்தி வெளியாக பைடனுக்கு பார்கின்சன் நோயா...? என்ற கேள்வியும் பரவ அதெல்லாம் இல்லை என கூறியிருக்கிறது வெள்ளை மாளிகை

எத்தனை இன்னல் வந்தாலும் ஓயப்போவது இல்லை என 81 வயதாகும் பைடன் சொல்ல... கமலா ஹாரிசையாவது வேட்பாளராக்குங்க என்ற கோஷம் முழங்க... டிரம்புக்கு எதிரே சங்கடமான சூழலை சமாளிக்கிறது ஜனநாயக கட்சி.  

Tags:    

மேலும் செய்திகள்