காலையிலேயே 126 பேர் உயிரை பறித்த நிலநடுக்கம் - நேரில் பார்த்தவர் சொன்ன அதிர்ச்சி தகவல்
சீனாவின் ஒரு பகுதியாக உள்ள திபெத் பகுதியில் உள்ள டிங்ரி கவுண்டியியில் நேற்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. திபெத் - நேபாள எல்லையில், இமயமலையின் அடிவார பகுதியில் எவரெஸ்ட் சிகரத்திற்கு அருகே ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 6 புள்ளி 8 அலகுகளாக பதிவானது. இந்த நில அதிர்வு, அண்டை நாடுகளான நேபாளம், பூட்டான் மற்றும் இந்தியாவிலும் உணரப்பட்டது. நிலநடுக்கத்தால், திபெத் பகுதியில், 126 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 188 பேர் காயமடைந்துள்ளதாகவும், சீன அரசின் செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. இதனிடையே, நிலநடுக்கத்தால், நேபாளத்தின் கும்ஜங் நகரில் உள்ள விடுதி குலுங்கிய சிசிடிவி பதிவுகள் வெளியாகியுள்ளன.