வார்த்தையை விட்ட டிரம்ப் - உடனே வந்த எச்சரிக்கை

Update: 2025-01-08 06:11 GMT

அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் வரும் 20-ம் தேதி பதவியேற்க உள்ளார். இதற்கு முன்னதாக பல்வேறு கருத்துக்களை டிரம்ப் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், ப்ளோரிடாவில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய டிரம்ப், நாட்டின் பாதுகாப்புக்காக கிரீன்லாந்து மீதான உரிமை மற்றும் கட்டுப்பாடு மிகவும் அவசியம் என அமெரிக்கா கருதுவதாக குறிப்பிட்டார். கிரீன்லாந்து மீதான கட்டுப்பாட்டை டென்மார்க் கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

பனாமா கால்வாய் மற்றும் கிரீன்லாந்தை கைப்பற்றுவதற்கான ராணுவ நடவடிக்கையை நிராகரிக்க மறுத்துவிட்டார். மெக்சிகோ வளைகுடாவின் பெயரை அமெரிக்க வளைகுடா என மாற்ற திட்டமிட்டுள்ளதாகவும், அதுதான் சரியாக இருக்கும் என்றும் டிரம்ப் தெரிவித்தார்.

நேட்டோ உறுப்பினர்கள் தங்கள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5 சதவீதத்தை பாதுகாப்பிற்காக செலவிட வேண்டும் என்று டிரம்ப் கூறினார்.

கனடா, பனாமா கால்வாய் மற்றும் கிரீன்லாந்து தொடர்பாக டிரம்ப் கருத்து தெரிவித்துள்ள நிலையில், கிரீன்லாந்து விவகாரத்தில் சின்னத்தை மாற்றி, டிரம்ப்புக்கு டென்மார்க் மன்னர் ஃபிரடெரிக் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்