அமெரிக்காவில் கல்வித் துறையை கலைப்பதற்கு உத்தரவிட்டுள்ள அதிபர் டிரம்ப், அதற்கான ஆவணத்தில் கையெழுத்திட்டுள்ளார். கல்வித் துறையை கலைத்து, அனைத்து நிர்வாகத்தையும் மாகாண அரசுகளிடம் வழங்குவதற்கான நடவடிக்கையை அவர் மேற்கொண்டுள்ளார். பள்ளிகளில் கல்விக் கட்டணம் செலுத்த முடியாத மாணவர்களுக்கு அமெரிக்க கல்வித் துறையே உதவி செய்து வருகிறது. அதிபர் டிரம்ப்பின் முடிவால் ஏழை மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று கூறப்படும் நிலையில், நிதி பற்றாக்குறை உள்ள பள்ளிகள், சிறப்பு மாணவர்களுக்கான திட்டங்களை அமெரிக்க அரசே தொடர்ந்து வழங்கும் என கல்வித் துறை செயலர் தெரிவித்துள்ளார்.