கொச்சை கொச்சையாக பதில் தரும் X-ன் Grok AI - ரெய்டு விட தயாரானதா இந்தியா?
க்ரோக் ஏஐ GROK AI உரையாடல் தளம் தொடர்பாக எக்ஸ் சமூக ஊடக நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்படவில்லை என்று மத்திய மின்னணு தொழில்நுட்பவியல் அமைச்சகம் தெரிவித்துள்ளது. எக்ஸ் சமூக ஊடகம் அண்மையில் அறிமுகம் செய்துள்ள க்ரோக் ஏஐ உரையாடல் தளத்தில், கொச்சையாக பதில் வந்ததால் பயனர்கள் கோபமடைந்தனர். மேலும் அந்த தளத்தில் பதில்கள் மறைக்கப்பட்டிருந்ததால் எக்ஸ் தளத்திற்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகின. அதற்கு மறுப்பு தெரிவித்த மத்திய அரசு, எக்ஸ் தளத்துடன் பேசி வருவதாக தெரிவித்துள்ளது.