பாகிஸ்தானில், பனிப்பொழிவு காரணமாக, கடந்த 5 நாட்களில் 35 பேர் உயிரிழந்துள்ளதாக மாகாண பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவித்துள்ளது.
வடமேற்கு கைபர் பக்துன்க்வா மாகாணத்தில், பனிப்பொழிவு அதிகரித்துள்ளது. தரையில், 7 அடி வரை உறைபனி தேங்கியுள்ளதால், போக்குவரத்து முடங்கியுள்ளது. மேலும், மின்சாரம், குடிநீர் விநியோகமும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. இதனிடையே, பனிப்பொழிவு மற்றும் கடும் குளிர் காரணமாக, கடந்த 5 நாட்களில் 35 பேர் உயிரிழந்துள்ளதாக மாகாண தேசிய பேரிடர் ஆணையம் அறிவித்துள்ளது.