ஓமனில் கனமழை, வெள்ளத்தில் சிக்கி 17 பேர் பலி

Update: 2024-04-17 00:57 GMT

ஓமன் நாட்டில் பெய்த கனமழை, பெருவெள்ளத்தில் சிக்கி 17 பேர் பலியாகி உள்ளனர். கடந்த சில நாட்களாக ஓமன் நாட்டில் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. இதனால் ஆறுகளில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சிக்கி இதுவரை 17 பேர் பலியாகி உள்ளனர். வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டவர்களை ஹெலிகாப்டர் உதவியுடன் மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. மேலும் சில நாட்களுக்கு ஓமனின் வடக்கு மற்றும் வடகிழக்கு பகுதியில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்