மர்ம வாசலை திறந்த வடகொரியா - கூட்டம் கூட்டமாக குவியும் சீனர்கள்

Update: 2025-02-27 04:05 GMT

வடகொரியாவில் கொரோனா காரணமாக கடந்த ஐந்து ஆண்டுகளாக சர்வதேச சுற்றுலாப் பயணிகளின் வருகை நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த நிலையில், தற்போது அதற்கு மீண்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் கடந்த ஆண்டு 100 ரஷ்யர்கள் வடகொரியாவுக்கு சுற்றுலா சென்றிருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், தற்போது 13 சீன சுற்றுலாப் பயணிகள் வடகொரியாவிற்கு வருகை தந்துள்ளனர். கொரோனாக்கு முன்பாக ஆண்டொன்றுக்கு மூன்று லட்சம் சீன சுற்றுலா பயணிகள் வடகொரியாவிற்கு வருகை தந்ததாக தரவுகள் கூறுகின்றனர். அதாவது வடகொரியாவிற்கு சுற்றுலா செல்பவர்களில் 90% பேர் சீனர்களாக இருக்கின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்